Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின்  ஆணையை  ரத்து செய்ய வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் 

கூட்டுறவு வங்கிகளை சிதைக்கும் வகையில் உள்ள ரிசர்வ் வங்கியின் ஆணையினை உடனே திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 4474 பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு, நெசவாளர் கூட்டுறவு, மீனவர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இவைகளுக்கு பணம் பட்டுவாடா மற்றும் கடன் வழங்குதல் மற்றும் வசூல் பணிகளை மாநிலத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், இதன் 700 க்கு மேற்பட்ட கிளைகளும் செய்து வருகின்றன. இந்த 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் முறையாக பாரத ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற வங்கிகளாகும்.

கடந்த 31-3-2016 அன்று இந்த வங்கிகள் அனைத்தும் லாபமடைந்த வங்கியாகவும், விவசாயிகளுக்கு கடன் உரிய நேரத்தில் வழங்கும் வங்கியாகவும், மாநில அரசு - மத்திய அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் வங்கியாகவும் திகழ்கின்றன. கடந்த 14-11-2016 அன்று பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றவோ, வைப்புத் தொகையாக செலுத்தவோ கூடாது என்று தடை விதித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 6000 கோடிக்கு மேற்பட்ட விவசாய கடன்கள் மற்றும் பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கிட வேண்டிய உரம், விதை மற்றும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்ய இயலாத வகையில் இச்சங்கங்களின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள்  உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடின்மையால் முடங்கி கிடக்கின்றன. தமிழகத்தின் கிராமப்பொருளாதாரம் வெறிச்சோடிப் போய்கிடக்கிறது. கறுப்புப்பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு அறிவித்து, அதன் மூலம் வெளியிடப்பட்ட இந்த ரிசர்வ் வங்கியின் ஆணையினால் சாதாரண ஏழை விவசாயிகள், விவசாயக்கூலிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பால், பட்டு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 80 லட்சத்துக்கு மேற்பட்ட கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில், பால், நெசவு, மீனவர் மற்றும் பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ள சாதாரண மக்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம், பிற வங்கிகளில் செய்யப்படுவது போல் பணப்பரிவர்த்தனை செய்யவும், கிராமப்பொருளாதாரத்தை உயிரோட்டத்துடன் செயல்பட வைக்கவும்,  14-11-2016 வெளியிட்டுள்ள ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ