Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் -  திருமாவளவன் 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் காயமடைந்த மீனவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வனமையாகக் கண்டிக்கிறோம். காயமுற்று சிகிச்சைபெற்றுவரும் மீனவர்கள் இருவருக்கும் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். 

பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்துவதை மட்டும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வர்ணித்து ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தும் மோடி அரசாங்கம் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்குப்படுவதை வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக பாஜக கருதவில்லையா? 

தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் சடங்குக்காக ஒரு கடிதம் எழுதிவிட்டு அத்துடன் தனது கடமை முடிந்துவிட்டதாக தமிழக அரசு நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. பேச்சுவார்த்தை என நாடகம் நடத்தாமல் இந்தத் தாக்குதலுக்கு நிரந்தரமான தீர்வு காணப்படவேண்டும். அதற்கான அழுத்தத்தை தமிழக அரசும் புதுச்சேரி அரசும் கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close