Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ரூபாய் நோட்டுக்கு எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ரூபாய் நோட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செல்போன் டவரில் ஏறி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சுமார் 150 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில், ஒருவர் மேலே ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். இதனையடுத்து விரைந்துச் சென்ற போலீசார், அவரைக் கீழே இறங்கி வருமாறு வலியுறுத்தினார்.

செல்போன் டவரில் மேலே ஏறியவரைக் காப்பாற்றும் முயற்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இதனிடையே டவர் மேலே ஏறி நிற்கும் அந்த நபர், தன்னுடைய கோரிக்கையை அடங்கிய கடிதத்தை, மேலிருந்து கீழே தூக்கிப்போட்டுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், படித்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

"தன்னுடைய பெயர் ஆர்.ரவிச்சந்திரன் என்றும், பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த ஒரு வார காலமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கவே" தாம் இந்த தற்கொலை முயற்சியை எடுத்துள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தைப் படித்த போலீசார், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். மேலும், டவர் மீது ஏறியவருடன் ஒலிபெருக்கி மூலம் பேசி, அவரை சமாதானப்படுத்தினார், மேலும், அவர் சொல்லும் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் ஏற்றுக்கொள்வதாகவும் போலீசார் தெரிவித்ததையடுத்து, ரவிச்சந்திரன், மெதுவாக கீழே இறங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து, ரவிச்சந்திரனை முகத்தை ஊடகங்களுக்கு காட்டாமல், அவரைக் கைது செய்து போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். இதனிடையே தற்கொலை முயற்சிக்காக டவர் மீது ஏறியவரை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால், சில மணி நேரம் அண்ணா மேம்பாலம் மற்றும் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


- ரா.அருள் வளன் அரசு,  படங்கள்: தே.அசோக்குமார் 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ