Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், "நாளுக்கு நாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. முன்பை விட பல செயல்களில் தற்போது அவர், கவனம் செலுத்த துவங்கிவிட்டார். முக்கியமாக, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடக்க உள்ள 4 தொகுதியின் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில், நாடு முழுவதும் உள்ள 86 சதவீத மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பால், ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், மத்திய அரசிடம் அதிமுக எம்.பி.க்கள் நேரடியாகவே சென்று சுட்டிக்காட்டி உள்ளனர். புதிய 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது, தவறான முடிவு என தற்போது மத்திய அரசு உணர ஆரம்பித்துள்ளது" என்று அவர் கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close