Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமருடன் அ.தி.மு.க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர்.

கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கடையினர் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் தினேஷ், அரவிந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த மாதம் இந்தியா- இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று அ.தி.மு.க எம்.பி.க்கள் தம்பிதுரை, வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதல் மேலும் தொடராமல் இருக்க இலங்கை அரசை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ