Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரவக்குறிச்சி தேமக வேட்பாளருக்கு ரூ.5,000 அபராதம்!

அரவக்குறிச்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்த தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் கீதாவுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் கீதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரே மாதிரியான கோரிக்கை தொடர்பான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உயர் நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி வேட்பாளர் கீதாவுக்கு ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close