Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் புது வழக்கு

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்நிலைப் பற்றி தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் பெறக்கோரி சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்நிலைப் பற்றி தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் பெற வேண்டும். இந்த பிரமாணப் பத்திரம் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்களையும் கருத்தில் கொள்வதே சரியானது என்று தெரிவித்ததோடு, இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்தது. மேலும், இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ