Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டுறவு வங்கிகளில் பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதா? வைகோ கண்டனம்

மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இயங்கி வரும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், அதன் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் 813 கிளை கூட்டுறவு வங்கிகள், இவற்றின் மேற்பார்வையில் செய்யப்படும் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களின் வைப்புத் தொகை சுமார் 55 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாக இக்கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தடை உத்தரவால், கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்தவோ, சேமிப்புப் பணத்தை எடுக்கவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித பரிவர்த்தனைகளும் மேற்கொள்ள முடியவில்லை. இந்தக் கூட்டுறவு வங்கிகள் / கடன் சங்கங்களை மாத்திரமே நம்பி இதுநாள் வரை பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஆங்காங்கே தொடக்கக் கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, மத்திய அரசு அவசர நிகழ்வாகக் கருதி உடனடியாகத் தலையிட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கிராமப்புறச் சேவையை மையமாகக் கொண்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்"  என வலியுறுத்தியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close