Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரேஷன் கார்டுக்கு அலைக்கழிப்பு: கோவை பெண்ணின் விபரீத முடிவு

ரேஷன் கார்டு வழங்காமல் கோவை மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் அலைக்கழித்ததால் மனமுடைந்த பெண், தனது கையை பிளேடால் கிழித்துக் கொண்டார். இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பால்கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ரேஷன் கார்டு வேண்டி கோவை மாவட்ட வழங்கல் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு ரேஷன் கார்டு வழங்காமல் அலுவலர்கள், மீனாவை அலைக்கழித்துள்ளனர். இந்த அலுவலகம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், மீனா இன்று கோவை மாவட்ட வழங்கல் துறை அலுவலகத்துக்கு தனது குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது, ரேஷன் கார்டு தொடர்பாக அலுவலர்களால் மீனா மீண்டும் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மீனா, பிளேடால் தனது கையை கிழித்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மீனா கூறுகையில், ரேஷன் கார்டு வேண்டி கோவை மாவட்ட வழங்கல் துறை அலுவலகத்துக்கு பலமுறை வந்தபோதும் ரேஷன் கார்டு வழங்காமல் அலுவலர்கள்  அலைக்கழித்தனர். இதனால் மனமுடைந்து கையை கிழித்துக் கொண்டேன்" என்றார் வேதனையுடன்.

- சே.சின்னத்துரை

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close