Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 தொகுதிகளில் ரூ.13.75 கோடி பறிமுதல்: ராஜேஷ் லக்கானி தகவல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தற்போது வரை ரூ.13.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிக்குட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள்,  விரலில் மை வைக்கும் விவகாரம் தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இடது கை விரலில் தவறுதலாக மை வைத்துவிடாமல் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் மொத்தம் 749 பேர் வெளிமாநில பணிகளில் உள்ளனர். அவர்களுடைய தபால் வாக்குகள் அனுமதிக்கப்படும். அவர்கள் எல்லை பாதுகாப்பு, ராணுவம், காவல் பணிகளில் வெளிமாநிலங்களில் உள்ளனர்.

அரவக்குறிச்சியில் 45 லட்சமும், தஞ்சையில் 9.19 கோடியும், திருப்பரங்குன்றத்தில் 4.10 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளில் தற்போது வரை ரூ.13.74 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

- சி.தேவராஜன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close