Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1.5 ஏக்கர் பயிர் வாடியதால் வேதனை: ஈரோட்டில் விவசாயி தற்கொலை

1.5 ஏக்கர் பயிர் வாடியதால் மனவேதனையில் ஈரோடு விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். 

ஈரோடு மாவட்டம், தாமரைபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் 1.5 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், மழை சரியாக பெய்யாததால் மஞ்சள் பயிர் வாடியுள்ளது. இதனால், மனவேதனையில் இருந்துள்ளார் முத்துசாமி.

இந்த நிலையில், முத்துசாமி இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தண்ணீர் இல்லாமல் பயிர் வாடியதாலேயே முத்துசாமி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ