Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்..! ஜைதியிடம் அன்புமணி நேரில் வலியுறுத்தல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு பணம் வழங்கியிருப்பதால் அந்த தொகுதிகளுக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று அன்புமணி, தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து மனு வழங்கினார். அதில், 3 தொகுதிகளிலும்  பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எவ்வாறு விளையாடின என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

மேலும், இத்தொகுதிகளின் அதிமுக, திமுக  சார்பில் ஓட்டுக்கு பணம் தரப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதனடிப்படையில் 3 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ