Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கியில் நிற்கும் பொதுமக்களுக்கு தொண்டர்கள் உதவ வேண்டும்' -மு.க.ஸ்டாலின்

ங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு கட்சி தொண்டர்கள் உதவ முன் வரவேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

11வது நாளாக மக்கள்  ஏ.டி.எம்.கள் முன்பும், வங்கிகள் முன்பும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களின் பணத்தை எடுக்க வேண்டிய அவல நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், சென்னை திரும்பிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயனாவரம் மார்க்கெட், கொளத்தூர் தொகுதி பெரம்பூர் இந்தியன் வங்கி, ஜவகர் நகர் அலகாபாத் வங்கி ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், " '500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் வியாபாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், 500 ரூபாய்க்கு நடந்த வியாபாரம் எல்லாம் 100, 200 ரூபாய் கூட நடக்கவில்லை' என்றும் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்ததாக குறிப்பிட்டார். 'எங்களின் அன்றாட வேலையை விட்டு விட்டு, காலை முதல் இரவு வரை கால் கடுக்க வரிசையில் நிற்கிறோம். ஆனால் இப்போது 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்றும், அதற்கும் மை வைக்க வேண்டும் என்று கூறி அவமானப்படுத்துகிறார்கள்' எனவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்லது உதவி செய்ய அதிமுக அரசு எந்த முனைப்பும் காட்டவுமில்லை எடுக்கவுமில்லை. தமிழகத்தில் ஆட்சி ஒன்று இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பொதுமக்களின் இப்பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வங்கிகள் முன் நிற்கும் மக்களுக்கு விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது போன்ற பணிகளில் ஆங்காங்கே கழக தோழர்களும், நிர்வாகிகளும் முழு அளவில் ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

- ரா.அருள் வளன் அரசு
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ