Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக விவசாய சங்கத்தினர் பிரதமரை சந்திக்க திட்டம்!

 

மிழகத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

சம்பா சாகுபடி பாதிப்பு காரணமாக டெல்டா மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சம்பா சாகுபடி பாதிப்பு காரணமாக உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், சம்பா சாகுபடி பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

"காவிரி டெல்டாவில் இந்தாண்டு குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் தொடர்ந்து சம்பா சாகுபடியையும் போதிய தண்ணீர் இன்றி மேற்கொள்ள முடியாமல் பெரும் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். இதன் காரணமாக 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 23 ம் தேதி டெல்லி சென்று நாடாளுமன்றம் முன்பு விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம் கூறினார்.

- செய்தி மற்றும் படம்: க.சதீஷ்குமார் 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close