Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசாணை வரவில்லை என மணப்பெண்னை விரட்டிய வங்கி அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் வங்கியில் திருமண செலவுக்காக 1.98 லட்சம் மதிப்பில் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வந்த புவனேஸ்வரியிடம் வங்கி நிர்வாகத்தினர் பணம் வாங்க மறுத்துள்ளனர். திருமண செலவுக்கு 2.5 லட்சம் எடுக்கலாம் என்ற அரசு ஆணை இன்னும் மண்டல அளவிலேயே வரவில்லை என்றும் தற்போது டெபாசிட் செய்தால் 20-ம் தேதி திருமணம் என்ற போது நாளை பணம் கொடுக்க உத்தரவாதம் இல்லை என வங்கி நிர்வாகம் கைவிரித்து உள்ளது. புவனேஸ்வரி ஏமாற்றத்துடன் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பி சென்றுள்ளார்.

- சி.ய.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ