Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரத்குமாரின் புத்தம் புதிய ஜீப்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாரின் புதிய கார் ஜீப் கிராண்ட் செரூக்கி சம்மிட். இன்றுதான் காரை டெலிவரி எடுத்திருக்கிறார். சரத்குமார் கார் பிரியரும் கூட! இந்தக் கார் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதிதான் விற்பனைக்கு வந்தது. சரத்குமாரின் கிராண்ட் செருக்கீ காரின் விலை சுமார் 1.03 கோடி ரூபாய்.

இந்தக் காரில் 3.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 240 bhp சக்தியை அளிக்கிறது. மைலேஜ் லிட்டருக்கு சுமாராக 12.8 கிமீ மைலேஜ் தருமாம். இப்போதைக்கு ஜீப் இந்தியா நிறுவனத்தின் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுதான் விற்பனையாகின்றன. அடுத்த ஆண்டு முதல் இந்தக் கார்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ