Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துவங்கியது வாக்குப்பதிவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகின்றது. இப்போது அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. மாலை ஐந்து மணி வரை வாக்குகளை மக்கள் பதிவு செய்யலாம். நான்கு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும் வரும் 22-ம் தேதி அறிவிக்கப்படும்.

மொத்தமாக நான்கு தொகுதிகளையும் சேர்த்து 89 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளிலும், 812 வாக்குப்பதிவு மையங்களும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படுகின்றன. பாதுகாப்புக்கு 12 கம்பெனி ராணுவ வீரர்கள் களத்தில் உள்ளனர். வாக்காளர்களுக்கு இடது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது.

அரவக்குறிச்சியில் 1,70,483 வாக்காளர்களும்,  தஞ்சாவூரில் 2,02,002 வாக்காளர்களும், திருப்பரங்குன்றத்தில் 2,79,299 வாக்காளர்களும், நெல்லித்தோப்பில் 31,366 வாக்காளர்களும் உள்ளனர்.

இவற்றில் அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமியும் போட்டியிடுகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ