Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தயாராகும் மூன்று அறைகள்... 2008-லிருந்து 4005-க்கு மாற்றப்படுகிறாரா ஜெயலலிதா?!

ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்து எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஆனால், அவர் இப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது.
 
ஜெயலலிதா, தற்போது அப்போலோ மருத்துவமனையில் அறை எண் 2008-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். “முதல்வர் இன்னும் வென்ட்டிலேட்டரில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. தேவைப்படும் நேரங்களில் அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்படுகிறது” என அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று, அப்போலோ மருத்துவமனையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்ற அறைகள் அவசர அவசரமாக தூய்மை செய்யப்பட்டு புதிய படுக்கை வசதிகளுடன் திரைச்சீலைகள் போடப்பட்டுள்ளதாம்.

மருத்துவமனை வட்டாரங்களில் நாம் பேசிபோது, “முதல்வரின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு நோய்த்தொற்று வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக மருத்துவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தற்போது இருக்கும் அறையில் இருந்து பர்சனல் இன்டன்சிவ் கேர் யூனிட்டுக்கு இன்று மாற்றப்பட வாய்ப்புள்ளது. அது எந்த அறை என்பதை பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சொல்லாமல்தான் ஒரே நேரத்தில் மூன்று அறைகள் தயாராகிவருகின்றன. ஆனால் அறை எண் 4005-க்குத்தான் மாற்றப்பட வாய்ப்புள்ளது. தயாராகும் மூன்று அறைகளில் 4005 அறையும் உள்ளது” என்றனர்.
      

முதல்வரின் உடல்நிலை முழுவதும் சீராகி அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப ஏழு வாரங்கள் ஆகும். முதல்வர் எப்போது நினைக்கிறாரோ... அப்போது அவர் டிசார்ஜ் செய்யப்படலாம்” என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார் பிரதாப் ரெட்டி. தொண்டர்கள் எல்லோரும் முதல்வர் எப்போது வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் இப்போது பர்சனல் இன்டன்சியூ கேருக்கு ஜெயலிலதா மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த குழப்பத்தை அதிகரிக்க செய்கிறது.

- அ.சையது அபுதாஹிர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ