Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீதிமன்ற எச்சரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்

உச்ச நீதிமன்ற எச்சரிக்கையை மத்திய அரசு பொறுப்புணர்வுடன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை எளிதான முறையில் மாற்றிக் கொள்ள உடனடியாக வழி வகை செய்ய வேண்டும். 50, 100 ரூபாய் நோட்டுகளை தேவையான அளவுக்கு புழக்கத்தில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

செல்லாத நோட்டை மாற்றி ரூ.2000 ம் நோட்டை வழங்கி மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்துள்ளது. இதை மத்திய அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகளை மக்கள் மறக்க செய்திடவே, அவ்வப்போது அதிரடி திட்டங்களை  அறிவித்து மக்களை திசை திருப்பிவிட்டு, தன்னை அதிகாரத்தில் அமர வைத்தவர்களுக்கு வரிச்சலுகை, வங்கிகள் வழங்கிய கடன் தள்ளுபடி என நன்றிக் கடனை செலுத்தி வருகிறார்.

ஏழை, எளிய, அப்பாவி மக்களை நடுத் தெருவில் நிற்க வைக்கும் திட்டங்களை பாஜக அரசு இனியும் கைவிடவில்லை எனில், நாட்டு மக்கள் ஒன்று திரண்டு தெருவில் இறங்கி போராடுவது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்பதனை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருப்பது முற்றிலும் சரியே" என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ