Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடல்வளத்தைக் காக்க கோரிக்கை!

'ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டை மடி கொண்டு கடல் வளத்தை சுரண்டும் சமூகவிரோதிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கும் மீன்துறை அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அக்டோபர்-நவம்பர் மழை மாதங்களில் மீன்களின் இரண்டாம் இனப்பெருக்க காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் மீன்கள், ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக ஆழம் குறைந்த கடற்கரையை நோக்கி வரும். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி கொண்டு மீன் குஞ்சுகள் வரையில் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது, இதனால் திமிங்கிலம் உள்ளிட்ட பெரிய கடல் உயிரினங்கள் இரை கிடைக்காமல் கரை தட்டி இறக்கின்றன. ஆமைகள் அழிகின்றன. இவர்களால் பாரம்பரிய மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடல்வளத்தை பாதுகாக்கவேண்டிய வனத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, தமிழக அரசு கடல்வளத்தைக் காக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சே.சின்னத்தம்பி, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close