Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர்கள் 8-க்கும் மேற்பட்டோர் கைது

பணப்புழக்கத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்றிருந்த நிலையில் இன்று கடலுக்கு சென்றிருந்தனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது 8-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. மேலும், பல மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டி வந்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக யாழ்ப்பாணம் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ