Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மீனவர் பிரச்னையில் இலங்கையை எச்சரிக்க வேண்டும்' -  ஜி.ராமகிருஷ்ணன் 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த புதன்கிழமை (நவம்பர் 16) நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த அரவிந்தன், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த தினேஷ் என்ற பாலமுருகன் ஆகிய இரண்டு மீனவர்கள் மீது குண்டு பாய்ந்து, ஆபத்தான நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அடுத்தடுத்து உச்சகட்டத்திற்கு செல்வது கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது.

மீனவர்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இத்தகைய தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளான இரண்டு மீனவர்களின் உயிரை பாதுகாக்க தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சையும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close