Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, அப்போலோவில் அட்மிட்டாகி நாளையுடன் இரண்டு மாதங்கள் முடிவடையப் போகிறது. ஆனால், தமிழக அரசியல் நாள்தோறும் அவரை சுற்றித்தான் நடந்துகொண்டு இருக்கிறது. 


நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா, டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்திகள் வெளியானது. ஆனால், அவர் தனி வார்டுக்கு மட்டுமே மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல், ரூபாய் நோட்டுப் பிரச்னை, தமிழக அரசியல் சூழல் போன்றவற்றைப் பற்றி அவர் ஆலோசனை நடத்தினார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ