Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய நோட்டு விவகாரம்: நவ.23ல் ஒன்றுகூடும் எதிர்க்கட்சி எம்பிக்கள் 

பழைய ரூபாய் நோட்டு பிரச்னையை தீர்க்கக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வரும் 23-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்ததோடு, இந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்தனர். முதலில் 4000 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பின்னர் 4500 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது மத்திய நிதியமைச்சகம். பின்னர், 2000 ரூபாய் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளித்தது நிதியமைச்சகம். மேலும் பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவித்தது. இதனால், வங்கிகளில் கூட்டம் குறைந்தது. பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். பின்னர் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் பணத்தை எடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.

இந்த நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் மக்கள் சந்தித்து வரும் பிரச்னையை தீர்க்கக்கோரி மக்களவை, மாநிலங்களவையின் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், வரும் 23-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ