Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் வங்கியில் கொள்ளை முயற்சி

சென்னை அண்ணாசாலையை அடுத்த ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

சென்னை அண்ணாசாலை டிவிஎஸ் நிறுவனம் பின்புறம் உள்ள ஒயிட்ஸ் சாலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றியும், டெபாசிட்டும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வங்கியின் சுவற்றை கொள்ளையர்கள் துளையிட்டு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் இருந்த அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சென்னை அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

--படம்: தி.குமரகுருபரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close