Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சால் சலசலப்பான காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசைக் கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சியை தூற்றியவர்களை திருநாவுக்கரசர் மேடையில் அமர வைத்துள்ளார். இனிமேலாவது கட்சிக்கு துரோகம் செய்யாமல் இருங்கள்" என்று பேசினார்.

இளங்கோவனின் இந்த பேச்சு ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, இளங்கோவன் பேச்சுக்குறித்து திருநாவுக்கரசர் விளக்கம் அளித்தார். "காங்கிரஸ் கட்சி வலுப்பெறவே பிரிந்து சென்றவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தேன். அதன்படியே கூட்டணியை விடக்கூடாது என்பதற்காக டிகேஎஸ்ஸை அழைத்தோம்" என்றார் திருநாவுக்கரசர்.

மேலும் அவர் கூறுகையில், ராகுல்காந்தி அடுத்த பிரதமராக வருவார் என காங்கிரஸ் சொல்லி திருமாவளவன் பேசவில்லை. திருமாவளவனை மனம்நோகும்படி பாஜகவினர் பேசுவது கண்டனத்திற்குரியது என்றார்.  



படங்கள்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ