Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகளில் கூட்டம் குறைந்தது ஏன்? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி விளக்கம்

வங்கிகளில் கூட்டம் குறைந்தது ஏன் என்பது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி விளக்கம் அளித்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்ததோடு, இந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்தனர். முதலில் 4000 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பின்னர் 4500 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது மத்திய நிதியமைச்சகம். பின்னர், 2000 ரூபாய் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளித்தது நிதியமைச்சகம். மேலும் பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவித்தது. இதனால், வங்கிகளில் கூட்டம் குறைந்தது. பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். பின்னர் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் பணத்தை எடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.

இந்த நிலையில் வங்கிகளில் கூட்டம் குறைந்தது ஏன் என்பது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரி பார்த்திபன் இன்று விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரலில் மை வைக்கத் தொடங்கிய பிறகு வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்துள்ளது. 4 மாதமாக செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளில் 500, 1000 ரூபாய்  நோட்டுகள் செலுத்தி வருகின்றனர்.  6 மாதமாக செயல்படாமல் உள்ள வங்கி கணக்கை மீண்டும் புதுப்பிக்க ஆதார் எண், பான்கார்டு அவசியம் என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close