Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நுழைவுத்தேர்வு முடிவு தற்கொலைக்கு சமம்: எச்சரிக்கும் திருநாவுக்கரசர்

தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்த நுழைவுத் தேர்வு பிரச்னையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கப்பட்டு இறுதி முடிவெடுக்க தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், அத்தகைய முயற்சிகள் எடுக்காமல் நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்கிற முடிவு தற்கொலைக்குச் சமமானது என்று எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீட்டு அடிப்படையில் சமூகநீதியை நோக்கமாகக் கொண்டு கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2017-ம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிக்கைகள் டிசம்பர் மாதத்தில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  டெல்லி சென்ற தமிழக கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடுத்த கல்வியாண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் இத்தேர்வை எழுதுகிற கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த முடிவை எந்த அடிப்படையில் எடுத்தார் என்பதை இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதுபோன்ற கொள்கை முடிவுகளை அமைச்சரவையில் விவாதித்து எடுக்கப்பட்டதா? குறைந்தபட்சம் அனைத்து கட்சியினரையும் அழைத்துப் பேசி முடிவெடுக்க தயக்கம் காட்டுவது ஏன்? கல்வித் துறையில் தமிழகம் மிகப்பெரிய குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது. 

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் தனித்தன்மை வாய்ந்ததாகும். தமிழகத்தில் மருத்துவ கல்விக்காக ஆண்டுதோறும் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மத்திய பாடத்திட்டத்தின்படி நடைபெறுவதால் மாநில பாட திட்டத்தின்படி படித்த 8 லட்சம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய வகுப்பில் பிறந்த பின்னணி கொண்டவர்கள். பாடத்திட்டத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது மத்திய பாட திட்டத்துக்கும், மாநில பாடத்திட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை அகற்றாமல் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களை அனுமதிப்பது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.  இதன்மூலம் வேறு மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பயனடைய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வேறுபாடுகளை பயிற்சி வகுப்புகளால் போக்கிவிட முடியாது. அடிப்படையில் பாடத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வியில் அனைவருக்கும் சமஉரிமையும், சம வாய்ப்பும் உருவாக்கித் தராமல் அனைவருக்கும் சம தகுதி என்று பேசுவதில் எந்த பொருளும் இல்லை. 

தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்த நுழைவுத் தேர்வு பிரச்னையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கப்பட்டு இறுதி முடிவெடுக்க தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக முன்வர வேண்டும். அத்தகைய முயற்சிகள் எடுக்காமல் நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்கிற முடிவு தற்கொலைக்குச் சமமானதாகும். மத்திய - மாநில அரசுகளின் இப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ