Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா புஷ்பாவைக் கைது செய்யத் தடை! 

சசிகலா புஷ்பாவை வரும் வெள்ளிக்கிழமை வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆனைக்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், சசிகலா புஷ்பா எம்.பி மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் பணிப்பெண்களுக்கு ஆதரவாக பெண் வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் ஆஜரானார். இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டி, அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியதாக சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களையும் சேர்த்து கைது செய்ய முயற்சி நடந்து வருவதால் முன்ஜாமீன் வழங்கும்படி சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், ' சசிகலா புஷ்பாவை கைது செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளோடு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 

மேலும், வக்கீல் வீடு தாக்கப்படுவதற்கு முன்பு தாக்குதல் நடத்திய நபர்கள் சசிகலா புஷ்பாவுடன் பேசியதற்கான ஆடியோ ஆதாரங்களை அரசு சமர்ப்பித்து உள்ளது. மேலும் வக்கீல் வீட்டை தாக்குவதற்காக சசிகலா புஷ்பாவிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றதாக ஹரி போலீசில் தெரிவித்துள்ளார். எனவே, சசிகலா புஷ்பாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தமிழக போலீஸ் கைது நடவடிக்கையில் இறங்கலாம் என்பதை அறிந்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா. வரும் வெள்ளிக் கிழமை வரையில் அவரைக் கைது செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close