Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு கட்டட சுவர்களில் ஓவியப்போட்டி... சுவர்களை வண்ணமயமாக்க மதுரையில் 'புது முயற்சி'!


மதுரை : மதுரையில் அரசியல் விளம்பரங்களால் மோசமாக காட்சியளித்து வரும் அரசு கட்டட சுவர்களை வண்ணமயமாக்க அரசு கட்டட சுவர்களில் ஓவியப்போட்டியை அறிவித்து நடத்தி வருகிறது மதுரை மாநகராட்சி.

அரசு கட்டடங்களின் சுவர்கள் பெரும்பாலும் மோசமான நிலையில் தான் காட்சியளிக்கும். முக்கியமான சில அலுவலகங்கள் தவிர, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள அரசு கட்டட சுவர்கள் பெரும்பாலும் அரசியல் மற்றும் சினிமா விளம்பரங்களைத் தாங்கி மோசமாகவே காட்சியளிக்கும். மதுரையும் இதற்கு விதி விலக்கல்ல. இந்நிலையில், அரசு கட்டட சுவர்களை ஓவியங்கள் கொண்டு அழகாக்க திட்டமிட்ட மதுரை மாநகராட்சி புதிய அணுகுமுறையை கடைபிடித்துள்ளது.

அதாவது இந்த சுவர்களில் ஓவியப்போட்டியை நடத்தியுள்ளது மதுரை மாநகராட்சி நிர்வாகம். இதற்காக அரசு கட்டட சுவர்களில் ஓவியம் வரைய தொழில்முறை ஓவியர்கள், ஓவிய ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. ஏற்கெனவே மாநகராட்சியின் இந்த அழைப்பை ஏற்று காந்தி மியூசியம், தமுக்கம்,கலெக்டர் அலுவலக பகுதிகளில் சுவர்களில் ஓவியங்களை வரைந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி அறிவிப்பை ஏற்று, மதுரை ரயில் நிலைய சுற்று சுவர்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கள் எண்ணத்தில் தோன்றிய சித்திரங்களை வண்ணங்களில் பிரதிபலிக்க துவங்கி இருக்கிறார்கள். இன்றும் நாளையும் இப்பகுதியில் சுவற்றில் ஓவியம் தீட்ட உள்ளனர். பெயின்ட், ப்ரெஷ்களை அவர்களே கொண்டு வந்து உற்சாகமாக வரைகிறார்கள். சிறந்த ஓவியத்துக்கு பரிசு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கட்சித்தலைவர்கள் சாதித்தலைவர்களை புகழ்ந்து எழுதப்பட்ட வாசகங்களால் மோசமாக காட்சியளித்து வந்த அரசு கட்டட சுவர்கள், இப்போது புதிய சிந்தனைகளின் சித்திரங்களால் ஜொலிக்கத்துவங்கியுள்ளது.

- செ.சல்மான்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close