Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்து ஒற்றுமை மையம் சார்பில் அடையாள உண்ணாவிரதம்!

 

இந்து ஒற்றுமை மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பல வருடங்களாக இந்து இயக்கத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், இந்து இயக்கத் தலைவர்களின் வீடுகள், கடைகள், சொத்துக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடித்தும் போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தும், இந்து இயக்கத் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்து ஒற்றுமை மையம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ