Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலாவுக்கு தடை!

தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பான ஆலைகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டுக் கோலா நிறுவனங்கள் தண்ணீர் எடுத்து வருவதாகப் பிரபாகரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால் இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முக்கியமாகத், தாமிரபரணியில் இருந்து 5 மாவட்டங்களுக்குக் குடி தண்ணீர் வழங்கப்படுவது தடைபடுவதாகவும், அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலா குளிர்பான ஆலைகளுக்கு அதிரடியாகத் தடை விதித்தது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close