Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2000 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு 

புதிய 2000 ரூபாய் செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த அக்ரி.கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "புதிய இரண்டாயிரம் ரூபாய்தாளில் சர்வதேச அளவில் பயன்பாட்டிலுள்ள எண்களை பயன்படுத்தாமல் தேவநாகரி மொழி வடிவத்தில் எண்களை குறிப்பிட்டுள்ளது தவறு. அப்படி தேவநாகரி மொழி வடிவத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியிருக்க வேண்டும். அப்படி இயற்றாதபோது தேவநாகரி வடிவத்தை எண்களுக்கு பயன்படுத்தியது தவறு. அது மட்டுமில்லாமல் புதிய இரண்டாயிரம் ரூபாய் வெளியிட ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு முறையாக அனுமதி பெறவில்லை. அதனால் புதிய 2000 ரூபாயை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு விசாரணை இன்று விசாரிக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் நாளைக்கு விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.

செ.சல்மான்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close