Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள்  வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சித் தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாடம் நடந்து வருகிறது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். இரண்டாவது இடத்துக்கு திமுகவும், 3-வது இடத்துக்கு பாஜகவும், 4-வது இடத்துக்கு தேமுதிகவும் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்று மதியத்துக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையைத் தொடர்ந்து அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் திரண்ட அதிமுகவினர் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டினர்.

இதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

படங்கள் : மீ.நிவேதன், தே.அசோக் குமார்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ