Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும்: லக்கானியிடம் தமிழிசை புகார்

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் பதிவாக வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது. இங்கு முகவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், பா.ஜ.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சாலையில் அமர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் பிரபு, தே.மு.தி.க. வேட்பாளர் முத்து உள்பட 36 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close