Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலிடத்தை தவறவிட்டது இப்படித்தான்! தமிழிசை தடாலடி

அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுத்திருந்தால் பாஜக 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு வந்திருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடந்து வருகிறது. இங்கு முகவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், பா.ஜ.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சாலையில் அமர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் பிரபு, தே.மு.தி.க. வேட்பாளர் முத்து உள்பட 36 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "பாஜக வேட்பாளர் இல்லாமலேயே வாக்கு எண்ணிக்கை நடந்துள்ளது. பாஜக வேட்பாளர், முகவர் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடந்தது தவறு. பாஜக, தேமுதிக வேட்பாளர்களுக்கு போதிய வசதிகளை செய்து தந்திருக்க வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுத்திருந்தால் பாஜக 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு வந்திருக்கும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ