Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500, 1000 நோட்டுகளால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்துக்கு 25% வருவாய் இழப்பு!

நாடு முழுவதும் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற விமான நிலையங்கள், ரயில்வே, பஸ் நிலைய டிக்கெட் கவுன்டர்கள், அரசு கூட்டுறவு அங்காடிகளில் வரும் 24-ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது. ஒரு சில துறைகளில் மட்டுமே இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.

குறிப்பாக, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகளை தவிர, பெரும்பாலான பேருந்துகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வாங்குவதில்லை. இதனால், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகளை தவிர, மற்ற பேருந்துகளில் நடத்துநர்கள் மூலம் ரூ.500, 1000 நோட்டுகள் பெற வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், டிக்கெட் முன்பதிவு மையங்களில் பழைய நோட்டுகளை பெற்றுக் கொள்கிறோம். இதுதவிர, மாதந்தோறும் சீசன் பாஸ் வழங்கவும் பழைய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close