Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்து ஒற்றுமை மையம் அடையாள உண்ணாவிரதம்!

இந்துக்களின் உரிமை பறிபோவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை சிவா தலைமையில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கூட்டத்தில் பேசிய சிவா,  "இந்துக்கள் தமிழகம் முழுவதும் பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கோயில் சொத்துக்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளை அரசு தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றார். 

 

- க.சதீஷ்குமார் திருவாரூர் 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ