Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதனை விசாரிக்க 10 நாள் கஸ்டடி கேட்கும் போலீஸ்

பணமோசடி வழக்கில் 5 மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த 'வேந்தர் மூவீஸ்' மதன் நேற்று திருப்பூரில் பிடிபட்டார். பிடிபட்ட மதன், நேற்று சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மதனிடம் விசாரணை நடத்த உள்ளது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர். இந்த நிலையில், மதனை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ