Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஸ்மாக் அதிகாரிகள் மீது தேசத் துரோக வழக்கு! -அர்ஜுன் சம்பத் கோரிக்கை

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், 'கடந்த 9.11.2016 முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணம் ஒழியும் என்ற அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் நோக்கத்தை சீர்குலைக்கும்விதமாக, தமிழ்நாட்டில் செயல்படுகின்ற போக்குவரத்து நிறுவனங்கள், டாஸ்மாக் உள்பட சில வங்கித்துறை அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு 500, 1000 கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்ய உதவி வருவதாக செய்திகள் வெளி வருகின்றன. சில இடங்களில் கைது சம்பவங்களும் புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டாஸ்மாக் மதுபானக் கூடங்களிலோ, அரசு பேருந்துகளிலோ 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்துக் கழக மற்றும் டாஸ்மாக் மதுபான மேலாளர்களின் ஒத்துழைப்போடு சில்லறை ரூபாய் நோட்டுகள் கறுப்புப் பண முதலைகளிடம் கைமாறி அதற்குப் பதிலாக 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. எனவே கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் போக்குவரத்துக் கழகம், டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் ஆகியவற்றில் வசூலான தொகைகளை  ஆய்வு செய்ய வேண்டும். டாஸ்மாக், அரசு போக்குவரத்து கழகங்களில் முறைகேடான முறையில் மாற்றப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவிக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்ட டாஸ்மாக் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதற்கான பணிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ