Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்குப் பருவ மழை, இந்த ஆண்டு உரிய நேரத்தில் தொடங்காமல் கால தாமதமாக அக்டோபர் 30-ம் தேதி தொடங்கி உள்ளது. இதனால், 2 நாட்களுக்கு மட்டுமே மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து கார்த்திகை மாதம் தொடங்கியதால், பனி பெய்து குளிர தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 5 செ.மீட்டர் மழையும், மயிலாடி மற்றும் கன்னியாகுமரியில் 4 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்