Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தே.மு.தி.கவை பின்னுக்குத் தள்ளிய பா.ஜ.க

தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்களை விட பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது அக்கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அதே நேரத்தில் மூன்று தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்களை விட பாஜக வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 3,806 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் அப்துல்லா சேட் 1,534 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,192 வாக்குகளும், பாமக வேட்பாளர் 794 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் 4-வது இடத்தை நோட்டா பிடித்துள்ளது. நோட்டாவுக்கு 2,295 வாக்குகள் கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,930 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 4,105 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,082 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 2,214 வாக்குகள் கிடைத்துள்ளன.

அரவக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் 1,070 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 1179 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close