Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் நாளை முதல் ஏ.டி.எம்.களில் ரூ.500 நோட்டு

தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள்  கிடைக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. மேலும்,  தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 8-ம் தேதி இரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால், பணப் புழக்கம் முற்றிலுமாக முடங்கியது. இதனால், மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்நிலையில், பொதுமக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு ஏதுவாக நாளை முதல் புதிய 500 ரூபாய்கள் ஏ.டி.எம். இயந்திரங்களில் வைக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் வேகமாகச் செய்யப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். 

பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகத்தை அறிமுகம் செய்தது முதல் ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போது ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் உள்ள சிக்கல்கள் புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளின் விநியோகம் சீரடைந்தவுடன் எளிதாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ