Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார்

இளைய திலகம் பிரபு நடித்த கலியுகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக காலடியெடுத்து வைத்த, கே.சுபாஷ் (57), சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துமனையில், சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் இயக்கிய சத்ரியன், உத்தம புருஷன், பவித்ரா, சுயம்வரம் போன்ற படங்கள் மக்கள் மனதில் இன்றும் நினைவில் நிற்கிற படங்கள்.

தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான கே.சுபாஷ், ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே என சில வெற்றி படங்களுக்குக் கதைகளும் எழுதியுள்ளார்.

இவரது தந்தையான இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு தான் பராசக்தி படத்தின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தினார்.

இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திறையுலகத்தினர் வந்த வண்ணம் உள்ளனர். இவரது உடல் நாளை காலை 10.30 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close