Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் நோட்டு பாதிப்புகள் குறித்து ஆய்வு!

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு அறிவிக்கப்பட்டது. அதனால், அடுத்த 2 நாட்களில் பண பரிவர்த்தனை இயல்புக்குத் திரும்பும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது. ஆனால், மத்திய அரசின் புதிய அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு, 16 நாட்கள் ஆகியும், நாடு முழுவதும் பணப் புழக்கம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்நிலையில், 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவின் பேரில் தமிழகத்தில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச்செயலாளரும் முன்னாள் தமிழகத் தேர்தல் ஆணையருமான பிரவீன்குமார், "பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்ததும், அதன் அறிக்கைகள் நாளை மறுதினம் 25-ம் தேதி, மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும்" என்று அவர் கூறினார். 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ