Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் சென்னை பல்கலைக்கழக பட்டமா?

சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுவதற்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழா டிசம்பர் முதல் நாள் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பல மாதங்களாக காலியாக கிடக்கும் நிலையில், துணைவேந்தர் இல்லாமல் விழா நடைபெறும்,  துணைவேந்தர் ஒப்பமின்றி பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் எந்த பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் இன்றி பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டதோ, துணைவேந்தரின் கையெழுத்தின்றி பட்டம் வழங்கப்பட்டதோ கிடையாது. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கடந்த 10 மாதங்களாக நிரப்பப்படாமல் கிடக்கும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மறைப்பதற்காக, பல்கலைக்கழக பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் இப்படி ஓர் ஏற்பாட்டை உயர்கல்வி செயலர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. துணைவேந்தரின் கையெழுத்தில்லாமல் பட்டங்கள் வழங்கப்படும் பட்சத்தில், வெளிநாட்டு அல்லது வெளிமாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களின் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.


சென்னை பல்கலைக்கழக அமைப்புச் சட்டத்தின் 20-வது பிரிவின்படி, பட்டச் சான்றிதழில் கையெழுத்திடும் அதிகாரம் துணைவேந்தருக்கு மட்டுமே உண்டு. துணைவேந்தர் இல்லாதபட்சத்தில் ஆட்சிக்குழுவால் (சிண்டிகேட் குழு) நியமிக்கப்படும் ஒருவர் துணைவேந்தருக்கு பதிலாக பட்டங்களில் கையெழுத்திடலாம்.

சென்னை பல்கலைக்கழகம் மட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 9.4.2015 தேதி முதல் 20 மாதங்களாகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஜூன் முதல் 5 மாதங்களாகவும் காலியாக உள்ளன. காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால், அங்கு படித்த மாணவர்கள் பட்டம் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால் தமிழக உயர்கல்வித்துறை சீரழிந்து விடும். எனவே, சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உடனடியாக நிறுத்த ஆளுநர் ஆணையிட வேண்டும். 3 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை  ஒரு மாதத்துக்குள் நிரப்பி, அதன்பின்னர் பட்டமளிப்பு விழாக்களை நடத்த ஆணையிட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close