Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

78 லட்சம் பேர் மின்கட்டணம் செலுத்துவதில்லை!


 

தமிழகம் முழுவதும் வசிக்கும்  குடும்பங்களுக்கு தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு வழங்கி வருவதால், சுமார் 78.55 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் நுகர்வை 100 யூனிட், 200 யூனிட் மற்றும் 500 யூனிட் என 4 பிரிவுகளாகக் கணக்கிடப்படுவதாகவும், இரண்டு மாதங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் அளவுக்குக் குறைவாக பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவசியம் இல்லை என்று கடந்த மே மாதம் 23-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பால், தற்போது வரை 190.90 லட்சம் குடியிருப்பு மின் நுகர்வோர்கள் பயன்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 100 யூனிட் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும் 78.55 லட்சம் பேர் மின்கட்டணமே செலுத்துவதில்லை என்றும், கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் இலவசம் என்ற மின்சார அளவை 200 யூனிட் என்று உயர்த்தியதன் மூலம் தற்போது 1 லட்சத்து 11 ஆயிரத்து 10 கைத்தறி நெசவாளர்களும், அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார அளவை 500 யூனிட்டிலிருந்து 750 யூனிட்டாக உயர்த்தியதன் மூலம் 98 ஆயிரத்து 712 நெசவாளர்களும் பயன்பெறுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close