Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை விமான நிலையத்தில், 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 31 வரை சிறப்பு கவுன்டர்கள்


500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கான தடை உத்தரவை அடுத்து பொதுமக்கள் பலரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பயணிகள் கூடுதல் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில், வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள சிறப்பு கவுன்டர்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், சர்வதேச முனையங்களில் பயணம் செய்யவிருக்கும் பயணிகள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சிறப்பு கவுன்டர்கள் மூலமாக மாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் சிறப்பு கவுன்டர்கள் செயல்படத் தொடங்கும். வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை இதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ