Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவசர சிகிச்சையாக இருந்தாலும், ஆதார் எண் அவசியம் - திண்டுக்கல் அரசு மருத்துவமனை அறிவிப்பு!


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் புதிய அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் புதிய அறிவிப்பை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையில், ஆதார் எண் இருந்தால் மட்டுமே நோயாளிகளுக்கு சீட்டு வழக்கப்படும் என கூறியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் வெளிநோயாளிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் அட்டை, அலைபேசி எண்களை சீட்டு வாங்கும்போது சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைக்காக வருபவர்களிடமும் ஆதார் அட்டை கேட்கப்படுவதால் மருத்துவமனை நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த அறிவிப்பு நோயாளிகளை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது. இதனால் நேற்று நோயாளிகளின் உறவினர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நேற்று முதல் நாள் என்பதால் சீட்டு வழங்கிய ஊழியர்கள் இன்று முதல் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என கூறியிருந்தனர். அவசர சிகிச்சைக்காக வருபவர்களிடமும் ஆதார் எண்ணை தந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறுவது வேதனை அளிப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close