Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பள்ளி கல்வி உதவித் தொகைக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

 

எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்கள் ஆண்டுதோறும் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவது வழக்கம்.

இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு 2017-ம் வருடம் ஜனவரி 28-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இம் மாதம் 23 முதல் டிசம்பர் மாதம் 2-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

டிசம்பர் 5 கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ